21 Jun 2019

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோக வாழ்வு சஞ்சிகை வெளியீட்டு விழா -(வீடியோ)

SHARE
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோக வாழ்வு சஞ்சிகை வெளியீட்டு விழா
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கதிரவன் கலைக்கழகம் நடாத்தும் ந.முரளீதரன், மற்றும் க.இறைவன் ஆகியோரின் யோக வாழ்வு சஞ்சிகை வெளியீட்டு விழா மட்.தாழங்குமா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை(21) நடைபெற்றது.

கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த.இன்பராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு வலய வலயக் கல்விப் பணிப்பாளர் வே.மயில்வாகனம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி கி.ரமேஸ் மற்றும் மண்முனைப்பற்றுக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் க.நல்லதம்பி அவர்களும், கௌரவ விருந்தினர்களாக மட்.தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய அதிபர் சா.மதிசுதன், மற்றும் மண்முனைப்பற்று கலாசார உத்தியோகஸ்த்தர் திருமதி வளர்மதி.ராஜ், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது முதற் பிரதியினை  மட்டக்களப்பு தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர், தவராசா அவர்கள் பெற்றுக்கொண்டார். நூல் நயவுரையை மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோகா வித்தியாசாலையின் இயக்குனர் மட்டுநகர் சிவ வரதகரன் நிகழ்த்தினார். வரவேற்புரையை ஊடகவியளாரும், யோகாசன பயிற்றுவிப்பாளருமான வ.சக்திவேல் அவர்களும், நன்றியுரையை கதிரவரன் பட்டிமன்றப் பேரவையின் கவிஞர் அழகு தனு அவர்களும், நிகழ்ச்சித் தொகுப்பை புதுவையூர் பு.தியாகதாஸ் அவர்களும் நிகழ்த்தினர்.






















































SHARE

Author: verified_user

0 Comments: