உயிர்ந்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு 41 ஆம் நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறையில் வெள்ளிக்கிழமை (31) இரவு முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
கடந்த ஏப்பர் 21 இல் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமன குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு 41 ஆம் நாள் நினைவு வணக்க நிகழ்வு அம்பிளந்துறை இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின்போது உயிர்நீத்தஉறவுகளுக்கு தீபச்சுடர் ஏற்றி மலரஞ்சலி இடம்பெற்றன.
குறித்த நிகழ்வின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர் பா.அரியநேத்திரன் மண்முனை தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் செ.நகுலேஸ்வரன், அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அதிபர் சு.தேவராசா மற்றும் ஊர்பொதுமக்களும்கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment