1 Jun 2019

ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையின் போரில் தமது அமைச்சின் ஊடாக 25 கோடி ருபா செலவில் சேதமுற்ற சியோன் தேவாலய புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது - அமைச்சர சஜித் பிரேமதாஸ

SHARE
ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையின் போரில் தமது அமைச்சின் ஊடாக 25 கோடி ருபா செலவில் சேதமுற்ற சியோன் தேவாலய புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது  தற்கொலை குண்டுத் தாக்கதலின் வலியை நன்கு உணர்ந்தவன் நான் - அமைச்சர சஜித் பிரேமதாஸ
எஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையின் போரில் தமது அமைச்சின் ஊடாக 25 கோடி ருபா செலவில் சேதமுற்ற சியோன் தேவாலய புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது  தற்கொலை குண்டுத் தாக்கதலின் வலியை நன்கு உணர்ந்தவன் நான் என அமைச்சர சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற சியோன் தேவாலயத்தை அமைச்சர் சஜித் பிரேமதாஸ சனிக்கிழமை (01) விஜயம் மேற்கொண்டு அதனை பார்வையிட்டதுடன் குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட உறவினர்களையும் சந்தித்து தமது அமைச்சினூடாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் சம்மந்தமாக இதன்போது கலந்துரையாடினார். 

சியோன் தேவாலய பிரதான போதகர் ரொஷான் மகேஷன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இறைவணக்கமும் இடம்பெற்றது.  

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்…. ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையின் போரில் தமது அமைச்சின் ஊடாக 25 கோடி ருபா செலவில் சேதமுற்ற ஆலய புனரமைப்புக்கும் பாதிக்கப்பட்டவர்களது சமுக வலுவுட்டல் செயற்றிட்டத்திற்கும் பணிகள் முன்னெடுக்கப் படவுள்ளன. தற்கொலை  குண்டு தாக்குதலின் பாதிக்கப் பட்டவர்களது மனவேதனை தன்னை விட வேறொருவருக்கும் அதிகம் தெரியாது, தன்னால் முடிந்தளவு தனது அமைச்சின் ஊடாக உதவி செய்ய திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். இதேவேளை பாதிக்கப்பட்ட உறவுகளுடன் தனது துயரத்தையும் அமைச்சர் இங்கு பகிர்ந்து கொண்டார். 

அமைச்சரின் இவ் விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அமைச்சரின் செயலாளர்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தயாபரன் பொலிஸ் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர். 










SHARE

Author: verified_user

0 Comments: