மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பிக்கப்பட்ட மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசியபாடசாலையின் நூற்றாண்டு விழா. ஊர்வலம்.
1919.04.01 அன்று ஆரம்பிக்கப்பட்ட மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசியபாடசாலையின் நூற்றாண்டு விழா திங்கட் கிழமை (2019.04.01) மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பிக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் க.தம்பிராசா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். மேலும் அவ்வித்தியாலயத்தில் கல்வி பயின்ற ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள், கிராம பொதுமக்கள், நலன்விரும்பிகள் என சுமார் 3000 போர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
வித்தியாலயத்தின் கடந்த கால சாதனைகளைப் பறைசாற்றும் வகையில் சித்தரிக்கப்பட்ட வாகன ஊர்தியுடன், மாணவர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள், உள்ளிட்ட பலரும் ஊர்வலமாக வித்தியாலயத்திலிருந்து ஆரப்பித்து, மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி வழியாக களுதாவளை கொம்புச்சந்தி வரைச் சென்று பின்னர் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகம் வரை சென்று எருவில் கிராமத்தினூகடச் சென்று மீண்டும் வித்தியாலயத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து 100 பலூண்கள் பறக்கவிடப்பட்டு, நூற்றாட்டு விழா கேக் வெட்டப்பட்டது.
0 Comments:
Post a Comment