மட்டக்களப்பில் கழிவு நீரைச் சுத்திகரித்து கடலுக்குள் அனுப்பும் பாரிய திட்டத்திற்கான முன்மொழிவு
மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரப் பிரதேசங்கள் எதிர்நோக்கும் நில மாசுபாட்டைத் தவிர்த்து மக்களுக்கு கழிவு நீரைச் சுத்திகரிப்பதற்கும் தூய்மையான குடிநீரை வழங்குவதற்கும் ஏற்ற வகையில் பாரிய திட்டமொன்றுக்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் டி.ஏ. பிரகாஷ் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபைப் பிரிவிலும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபைப் பிரிவிலும் மேற்கொள்ளப்படவிருக்கும் கழிவு நீரைச் சுத்திகரித்து கடலுக்குள் அனுப்பும் கழிவு நீர் சுத்திகரிப்பு நியைலத்தினை அமைக்கும் பாரிய திட்டத்திற்கான கலந்தாரேலாசனைக் கூட்டம் ஏறாவூர் நகர சபையில் செவ்வாய்க்கிழமை 02.04.2019 இடம்பெற்றது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் டி.ஏ. பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அச்சபையின் தலைமைப் பொறியியலாளர் ஜி.ஜி. சுதர்ஷன், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. யூசுப், ஏறாவூர்ப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் ஜி. பவதாரணி, ஏறாவூர் நகர சபைத் தலைவர் ஐ. அப்துல் வாஸித், உள்ளுராட்சி அதிகார சபைப் பிரதிநிதிகள், பொலிஸ்;, மத்திய சுற்றாடல் அதிகார சபை, கரையோரம் பேணல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் டி.ஏ. பிரகாஷ், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஏறாவூர் நகரத்திற்கான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை மேற்கொண்டு அதற்கான திட்டத்தினைத் தயாரித்துள்ளது.
இத்திட்டத்தின் பிரகாரம் கழிவு நீரைச் சுத்திகரித்து கடலுக்குசுள் அனுப்புவதற்கான கழிவு நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தினை மக்கள் வசிப்பிடமற்ற கரையோரப் பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏறாவூரில் இடம்பெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் விரைவாக நகர மயமாகி வரும் செங்கலடி நகரம், வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் பிரதேசம் என்பனவற்றையும் உள்வாங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதால் நகர மயமாக்கலின் சூழல் பாதிப்புக்களை முன் கூட்டியே தவிர்த்துக் கொள்வதற்காக இந்த ஆலோசனை கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment