உலக ஓட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை.
உலக ஓட்டிச நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை ஒன்று “தீரணியம்” ஓட்டிசம் ஸ்பெக்ட்ரம் சீர்கேடு நிலையத்தில் (இல.18 கோவிந்தன் வீதி புளியந்தீவு) எதிர்வரும் 5.மார்ச்.2019 அன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 12 மணிவரை நடைபெறவுள்ளது.
தீரனிய நிலையமானது 2017 ஏப்ரல் மாதம் தொடக்கம் இயங்கி வருகின்றது ஓட்டிசம் ஸ்பெக்ட்ரம் சீர்கேடு உள்ள 40 சிறுவர்களை தற்போதுவரை இந்நிறுவனம் பராமரித்து வருகின்றது. ஏப்ரல் 2 ஆம் திகதியானது உலக ஆட்டிச ஸ்பெக்ட்ரம் குறைபாடு விழிப்புணர்வு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது இதனடிப்படையிலேயே இந்த பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment