9 Apr 2019

தாதிய வைத்திய உதவிச் சேவையாளர்கள் மற்றும், குறை நிரப்பு வைத்திய சேவையினரும், ஒன்றிணைந்த பணிப் புறக்கணிப்பு.

SHARE
தாதிய வைத்திய உதவிச் சேவையாளர்கள் மற்றும், குறை நிரப்பு வைத்திய சேவையினரும், ஒன்றிணைந்த பணிப் புறக்கணிப்பு. 
நாடுபூராகவுமுள்ள வைத்தியசாலைகள், மற்றும் சுகாதார நிலையங்களில், தாதிய வைத்திய உதவிச் சேவையாளர்கள் மற்றும், குறை நிரப்பு வைத்திய சேவையினரும், ஒன்றிணைந்த பணிப் புறக்கணிப்பு திங்கட்கிழமை (08) காலை 7 மணி முதல் இடம்பெற்றது.  

6 வருடங்களில் தர உயர்வைப் பெறல், தாதிய வைத்திய உதவியாளர் சேவை,  குறை நிரப்பு வைத்திய சேவை பட்டதாரிகளின் உத்தியோக ரீதியான தொழிலுக்குரிய சம்பள அளவுத்திட்டத்தைப் பெறல், சம்பள அளவு;திட்டத்தை தீர்க்க ரணுக்கே சம்பள மீளாய்வு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை உடனடியாக அமுல்ப் படுத்தக் கோரல், இழந்த பதவி நிலையை மீளக் கோரல், வரி விலக்கு வாகன அனுமதிப்பதிரம கோரல்,  3000 ரூபாவாக உள்ள விசேட படியை 6000 ரூபாவாக உயர்த்தக் கோரல்,  மேலதிக நேரக் கொடுப்பனவு ஒரு மணித்தியாலத்திற்கு 1ஃ80 ஆகப் பெறக் கோரல்,  வழங்கப்பட வேண்டிய மீதி மேலதிக நேரக் கொடுப்பனவை உடனடியாக வழங்குமாறு கோரல், சுகாதார நிருவாக சேவையை உருவாக்குமாறு கோரல் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தே இந்த சுகயீனப் போராட்டம் இடம்பெறுவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் தாத்திய உத்தியோகஸ்த்தர் தெரிவித்தார். இவ்வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க் கிழமை (09) காலை 7 மணிவரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 


SHARE

Author: verified_user

0 Comments: