ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் “நாட்டிற்காக ஒன்றினைவோம்” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மக்களின் இதுவரை தீர்க்க படாத பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக மாவட்டத்தின் 14 பிரதேச பிரிவுகளிலும் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் திங்கட்கிழமை (08) தேசிய சுற்றாடல் பாதுகாப்பு என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடற்கரை துப்பரவு செய்யும் பணி கல்லடி கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் காலை 7 மணியளவில் இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எம்.உதயகுமார் அவர்களின் தலைமையில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா மற்றும் ஜனாதிபதி செயலக பிரதானி எச்.எம்.பி.கிட்டிசேகர ஆகியோரின் பிரதான பங்குபற்றுதலுடனும் இந்நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட செயலகம் , சமுர்த்தி திணைக்களம் , ஆகியன இனைந்து ஒழுங்கு செய்த இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர் . மேலும் இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி பாக்கியராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment