3 Apr 2019

விசேட தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசு முன்வர வேண்டும்.

SHARE
விசேட தேவையுடையோருக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் அரசு பின்னிற்க கூடாது என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துதுள்ளார்.
போரதீவுப்பற்று பிரதேச  செயலகத்திற்குட்பட்ட கதிரவன் விசேட தேவையுடையோர் அமைப்புக்கு சுயதொழிலுக்கான முதற்கட்ட உதவியினை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

30வருட கால யுத்தத்தினாலும், ஏனைய காரணங்களினாலும் பலர் விசேட தேவையுடையோர்களாக மாற்றப்பட்டு எம்மத்தியில் வாழ்ந்துவருகின்றார்கள் அவர்களையும் எமது சமூகத்தில் இணைத்து எம்மோடு கொண்டு பயணிக்க வேண்டும். அவர்கள் தங்களை வளர்த்து கொள்ள சுயதொழிலினை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனகள் முன்வர வேண்டும். அரசாங்கம் பாதீட்டில் அவர்களுக்கு தனியான ஒதுக்கீடுகளை ஒதுக்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டும் எனவும்,

அதனை பெறுகின்ற பயனாளிகளும் அதனை உதாசீனம் செய்யாமலும், பயனற்ற வகையில் பயன்படுத்தாமலும் அவ் உதவியில் இருந்து வளர்ந்து தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி சமூகத்திற்கு ஓர் எடுத்துகாட்டாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: