மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரின் பங்குபற்றுதலுடன் போதைப்பொருளுக்கு எதிரான சித்திரை உறுதிமொழி இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிலும், அவரது நேரடிக்கண்காணிப்பில் நெறிப்படுத்தல் மற்றும் செயற்படுத்தப்படுகின்ற போதையிலிருந்து விடுபட்ட நாடு ஒன்றுக்கான விசேட நிகழ்வான சித்திரை உறுதி உரை நிகழ்வு புதன்கிழமை (03)காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கலாநிதி கோல்டன் பெர்னாண்டோ சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வினை மேலதிக அரசாங்க அதிபர் தேசிய கொடியினை ஏற்றி ஆரம்பித்து வைத்த பின் மாவட்ட செயலக உத்தியோகத்தர் மற்றும் பணியாளர்கள் உத்தியோக பூர்வமாக போதையிலுருந்து விடுபட்ட ஒரு நாட்டுக்கான சித்திரை உறுதி உரையை எடுத்துக் கொண்டார்கள்.
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந் கருத்து வெளியிடுகையில்;
ஜனாதிபதியின் போதையிலிருந்து விடுபட்ட நாடு போதைப்பொருள் தடுப்பு திட்டங்களை வலுப்பெறச் செய்வதற்கு அரச பணியாளர்களாகிய நாம் இன்றைய நாளில் உறுதி பூண வேண்டும்.சமூக சீரழிவுகளை கொண்டு வரும் போதை ஒளிப்பினை அமுல்படுத்தும் பிரிவிற்று முழு ஒத்துழைப்பை நல்கி நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்க முன்வர வேண்டும்.இந்த நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள்,அலுவலக பணியாளர்கள் என அனைவரும் கலந்து பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment