மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பதவிநிலை முகாமைத்துவ உதவியாளர் ராஜலிங்கம் அவர்கள் 28 வருட அரச சேவையில் இருந்து 2019.01.28 அன்று ஓய்வு பெற்றார். பொன்னம்பலம் அன்னம்மாள் தம்பதியினருக்கு ஆரயம்பதியில் பிறந்த இவர் தற்போது மட்டக்களப்பில் வசித்து வருகின்றார் ஆரம்பக்கல்வியை மட்டு இராமகிருஷ்ணா மிஷனரியில் பயின்ற இவர் உயர்கல்வியை மட்டு சிவானந்த வித்தியாலயத்தில் பயின்றார் .
1991 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் அதிபராக சேவையாற்றினார் அதே ஆண்டு இலங்கை நில அளவை தலைமை செயலகத்தில் எழுது வினைஞராக பணிபுரிந்தார் 2003 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு 2005 வரை அங்கு சேவையாற்றினார்.
2005 இல் வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி திட்ட திணைக்களத்தில் எழுத்து வினைஞராக பணியாற்றினார். 2010 ஆம் ஆண்டு மீண்டும் மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக இனைந்து ஓய்வு பெறும்வரை பதவி நிலை முகாமைத்துவ உதவியாளராக பணிபுரிந்தார். பணிரீதியாக மட்டுமல்லாது ஆன்மிக ரீதியாகவும் ஈடுபாடுகளை கொண்ட இவர் ஆன்மீக நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்பவராக காணப்படுகின்றார்.
0 Comments:
Post a Comment