வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி செவ்வாய்க்கிழமை (19) கதவடைப்புப் போராட்டத்துக்கும் நீதிக்கான மபெரும் மக்கள் பேரெழுச்சிக்கும் வருமாறும் ஏற்கனவே காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், வியாபார இஸ்த்தலங்கள், என்பன முற்றாக மூடப்பட்டுள்தோடு, வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு உத்தியோகஸ்த்தர்கள் சென்றுள்ள போதிலும் பொதுமக்கள் செல்லவில்லை. பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ளபோதிலும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் சென்றிருக்கவில்லை.
இந்நிலையில் தனியார் போக்குவரத்துக்கள் சேவையிலீடுபடவில்லை. எனினும் தூரப் பிரதேசங்களுக்கான போக்குவரத்துக்கள் இடம்பெற்றதோடு, இலங்கைப் போக்குவரத்திற்குச் சொந்தமான போருந்துகள் சேவையிலீடுபடும் அதேவேளை அவற்றில் பணயிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
0 Comments:
Post a Comment