17 Mar 2019

வயோதிபரின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு

SHARE
வயோதிபரின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவெம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து வயோதிபரான ஆணொருவரின் சடலத்தை மீட்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவெம்பு -2, சம்பந்தர் வீதியை அண்டி வசிக்கும் குமாரசாமி ராஜதுரை (வயது 67) என்பவரின் சடலமே சனிக்கிழமை 16.03.2019 மீட்கப்பட்டது.

வீட்டில் சடலமொன்று காணப்படுதாக தங்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேரச வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 

SHARE

Author: verified_user

0 Comments: