காட்டு யானை தாக்கியதில் மாடு மேய்க்கும் கூலித் தொழிலாளி ஸ்தலத்திலேயே பலி
மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கார்மலை எனும் காட்டுப்புறப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மாடு மேய்க்கும் கூலித்தொழிலாளியான ஆணொருவர் கொல்லப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாலை 16.03.2019 இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாவடிவெம்பு -2, காளிகோயில் வீதியை அண்டி வசித்து வந்த கிருஷ;ணபிள்ளை பஞ்சாயுதம் (வயது 50) என்பவரே பலியானவராகும்.
வழமை போன்று மாடு மேய்த்து அவற்றை பட்டியடிக்கு விரட்டிக் கொண்டு வரும்போது புதர்களுக்குள்ளிருந்து திடீரென வெளிப்பட்ட தனியன் காட்டு யானை இந்த மாடு மேய்ப்பவரைத் தாக்கி மிதித்துள்ளது.
அதனால் அவர் ஸ்தலத்திலேயே சுருண்டு வீழ்ந்து மரணித்துள்ளார்.
சம்பவத்தைக் கேள்வியுற்று ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இச்சமபவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment