திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னன் மரபுஆடி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை முருகன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டதன் பிற்பாடு மலைக்கு செல்ல முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மலையில் பல நெடுங்காலமாக முருகன் ஆலயத்தை வைத்து வழிபட்டு வந்ததாகவும் அதற்கு செல்வதற்கு தங்களுக்கு ஏற்ற ஒழுங்குகளை செய்து தருமாறும் தமது ஆலயத்தை மீட்டு தருமாறும் பல்வேறு தடவைகள் மக்கள் பல தரப்பினரிடம் கோரியிருந்தார்கள்.
இருப்பினும் அதற்கான சரியான ஏற்பாடுகள் எதுவும் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் சிவராத்திரி தினமாகும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மலையடிவாரத்திலேயே இருந்த ஆலயத்தில் மக்கள் பூசை வழிபாடுகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.
பல நெடுங்காலமாக மக்களால் வழிபட்டு வந்த இந்த கந்தசாமி மலையில் உள்ள முருகன் ஆலயத்தை தொல்பொருள் திணைக்களம் அபகரித்து, அது பௌத்த சின்னங்களாக மாறக்கூடாது என்ற நோக்கத்திலேயே மக்கள் அதனை மீட்டுத்தருமாறு தொடர்ந்து கூறி வருகின்ற நிலையில் இன்றைய தினமும் அந்த பூஜை நிகழ்வுகளோடு தங்களுடைய அந்த மலைக்கு சென்று அந்த பூஜைகளை நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை உரிய தரப்புகள் மேற்கொண்டு தர வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் முன்வைத்திருக்கிறார்கள்.
0 Comments:
Post a Comment