நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும். தேசத் தலைவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் நடந்து கொண்டது முன்னுதாரணமாகவிருக்கும். எமது நாட்டின் முன்னாள் தலைவர்கள் இம்ரான்கானிடம் மனித உணர்வுகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செமட்ட செமன மாதிரிக் கிராம நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நடராஜநந்தபுரம் கிராமத்தில் மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபை தலைவர் மா.ஜெகநாதன் தலைமையில் 20 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நிகழ்வில் கலந்து கொண்ட போது இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
தோடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
இந்திய விமானி அபிநந்தன் ஒரு தமிழன் பாகிஸ்தான் எல்லைக்குள் அவரது விமானம் வீழ்ந்ததும் பரசூட் மூலமாக குதித்தபோது அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் படையாலும் மக்களாலும் பலவந்தமாக முகமெல்லாம் இரத்தத்துடன் சிவப்பு முகமாகக் தாக்கப்பட்டிருந்தார்.
இருந்தாலும் கூட அந்நாட்டின் பிரதமராக விருக்கும் இம்ரான்கான் அவரை விடுதலை செய்வதற்கு எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்க விடயமாகும். யுத்தத் கைதிகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். கவனமாக கையாளப்பட வேண்டியது ஒரு யுத்த தர்மமாகும். அந்த இடத்தில் பாகிஸ்தான் பிரதமர் இப்படி நடந்திருப்பது அவரின் பண்பாகும். அது பாராட்டக்குரியது.
நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும். தேசத்தலைவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் நடந்து கொண்டது முன்னுதாரணமாகவிருக்கும். எமது நாட்டின் முன்னாள் தலைவர்கள் இம்ரான்கானிடம் மனித உணர்வுகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். அயல் நாட்டு எதிரியைக்கூட விடுதலை செய்யக்கூடிய பண்பையும் அரசியலையும் யுத்தத்தையும் இங்குள்ள முன்னாள் ஆட்சியாளர்கள் இம்ரான்கானிடம் கற்றுக்கொள்ள வேண்டுமென மட்டு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் நேற்று மாலை வவுணதீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டு மாவட்ட அரச அதிபர் மா.உதயகமார் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் பிரதேச சபைத் தவிசாளர் செ.சண்முகராஜா மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment