23 Mar 2019

களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக நா.நடேசன் கி.மா.க.பணிப்பாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்

SHARE

களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக  அதிபர் தரம் இரண்டைச் சேர்ந்த  நா.நடேசன் அவர்கள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் நியமிக்கப்பட்டு அவர் தனது கடமைகளை நேற்று உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
களுவாஞ்சிகுடியை சேர்ந்த இவர் களுவாஞ்சிகடி சரஸ்வதி வித்தியாலயம், பட்டிருப்பு மத்திய மகா விதித்தியாலயம் ஆகிய பாடசாலையில் கல்வி கற்று தனது உயர்தர கல்வியினை கணிதத் துறையில் கார்மேல் பாற்றிமா கல்லூரியில் பயின்று வெளியேறினார்.

கணிதப் பாடத்திற்கான ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் கணித தறையில் பயிற்சி பெற்று  பயிற்றப்பட்ட கணித ஆசிரியராக பல காலம் மிகவும் சிறந்த கணித ஆசிரியராக சேவையாற்றி வந்தார்.

இந் நிலையில் அதிபர் போட்டி பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் நியமனம் பெற்று மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும்  கோடைமேடு நவசக்தி வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றி வந்த நிலையில் தற்போது களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் சேவைகள் அனைத்தும் சிறப்பாக அமையவேண்டும் என பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் பழைய மாணவர் சங்கத்தினர்  தங்களது வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: