மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள அம்பிளாந்துறைக் கிராமத்தில் பிறந்த இ.சாந்தலிங்கம் 30வருட அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும், செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் உயர்தரக்கல்வியையும் பயின்ற இவர், 1989 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையின் காணிவிவசாய அமைச்சில் எழுதுனராக நியமனத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இச்சேவையில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே, கிராமசேவை உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பித்து, 2000 ஆம் ஆண்டு கிராமசேவை உத்தியோகத்தர் நியமனம் பெற்று அன்றிலிருந்து, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் கடமையாற்றி தனது 30வருட அரசசேவையில் இருந்து அண்மையில் ஓய்வுப்பெற்றுக் கொண்டார்.
சமய, சமுக பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இவர், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வண்ணக்கர் செயலாளராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அம்பிளாந்துறை கிராமத்தில் பிறந்து, மகிழடித்தீவில் திருமணம் செய்துகொண்ட இவர், தற்போது கல்லடியில் வசித்துவருவதுடன், முனைக்காடு கிராமசேவையாளர் பிரிவுகளில் கடமையாற்றிய நிலையிலேயே அரசசேவையில்
இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
0 Comments:
Post a Comment