புத்தாக்க விவசாய வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கு, ஆதாயம் அளிக்கும் நல் வாய்ப்புக்கள்.
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால், புத்தாக்க விவசாய வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கு, ஆதாயம் அளிக்கும் நல் வாய்ப்புக்ளை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால், புத்தாக்க விவசாய வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கு, ஆதாயம் அளிக்கும் நல் வாய்ப்புக்ளை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
அந்த வகையில் மேற்படி அமைச்சினால் புத்தாக்க விவசாய வியாபாரத் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் நோக்கில் வியாழக்கிழமை மற்றும், வெள்ளிழமை (21,22) ஆகிய இரு தினங்களும் மட்டக்களப்புக் கச்சேரியில் நேர்முகத் தேர்வு இடம்பெற்றன. அமைச்சின் அதிகாரிகள் நேரடியாகக் கலந்து கொண்டு நேர்புகத் தேர்வுகளை நடாத்தினர். இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.
இதன்போது இலங்கை இலவங்கப்பட்டை மற்றும் நறுமணச்சரக்குகள், வெட்டிய பூக்கள் மற்றும் இனத் தொகுதிப் பூக்கள், சிறிய விவசாய உபகரணங்கள், மீன்பிடி மற்றும் நீரியல்வள அலங்கார மீன்கள், விவசாயம் சார் கழிவுப் பொருட்கள் தீர்வுகள், கால்நடை வளர்ப்பு பால் உற்பத்திகள், விவசாய இயந்திரங்கள், மற்றும் உபகரணங்கள், விவசாயம் சார் சக்தி வலு தீர்வுகள், மூலிகைச் செடிகள் மற்றும் மருந்து வகைகள், பழவகை மற்றும் மரக்கறி வகைகள், உணவு மற்றும் மென் பானங்கள், கழஞ்சியப்படுத்தல் வசதிகள், சேதன விவசாயம், உள்ளிட்ட பல விடைங்களில் ஆர்வம் செலுத்துகின்றவர்களுக்கு, இச்செயற்றிட்டத்தின் மூலம் ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால், உதவித்திட்டங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment