இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்க்பபட்ட நாடு துரதிஷ;டவசமாக கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாகஇந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளி என அழைப்படலாயிற்று
கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஆர். ஞானசேகர்
முன்னரெல்லாம் இந்து சமுத்திரத்தின் முத்து (Pநசட ழக வுhந ஐனெயைn ழுஉநயn) என அழைக்க்பபட்ட இலங்கை துரதிஷ்டவசமாக கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாகஇந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளி (வுநயச னுசழி ழக ஐனெயைn ழுஉநயn) என பெயர் சூட்ப்பட்டதாக கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஆர். ஞானசேகர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலைமைபற்றி அவர் புதன்கிழமை 20.03.2019 கருத்து வெளியிட்டார்.
இது பற்றி மேலும் தெரிவித்த அவர்,
யுத்தத்தினால் கடந்த சுமார் 35 வருடங்கள் பாதிப்பை எதிர்நோக்கிய நிலையில் தற்போது மீண்டெழுந்து கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையைப் பற்றி கவனமெடுக்க வேண்டியுள்ளது.
இந்த மாகாணத்தில் இதற்கு முன்னர் சுற்றுலாத்துறை என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை.
இங்கு வருகை தந்த வெளிநாட்டினர் கிழக்கு மாகாணத்திற்கு வரும்பொழுது அவர்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கவி;ல்லை.
அவர்கள் இந்தப் பிரதேசங்களில் யுத்தத்தினால் ஏற்பட்ட மனித அவலங்களைப் போக்குவதற்கான தொண்டு நிறுவனப் பணியாளர்களாகவே வந்திருந்தார்கள்.
எனினும் 2009ஆம் ஆண்டு இந்த நாட்டின் யுத்த நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் ஏற்பட்ட சுமுக மான சூழ்நிலையை அடுத்துத்தான் முன்னேற்றம் வந்தது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தனது தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை உயிர்ப்பூட்டி அதன் மூலமாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பையும் கிழக்கு மாகணத்திற்குப் பெரும் பொருளாதார வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்ததில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
கிழக்கு மாகாணம் உலக சுற்றுலாப் பயணிகளினதும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளினதும் கவனத்தை ஈர்ப்பதில் புகழ் பெற்றது.
இங்கே உலகின் பெரிய பாலுட்டிகளான யானைகள், திமிங்கிலங்களை ஒருங்கே கொண்டதும் பல்லினங்களையும் பல்வேறு வளங்களையும்., வனப் பிரதேசங்கள் இயற்கை எழில் கொஞ்சுகின்ற கடல்கள், பல்லின மக்களின்; விருந்தோம்பல்கள் கலாச்சார விழுமியங்கள் சிறப்பான ஆயர்வேத வைத்திய முறைமைகள், எல்லாம் உல்லாசப் பயணிகளைக் கவரக் கூடிய அம்சங்களாக உள்ளன.
இந்து சமுத்திரத்தின் முத்து (Perl of The Indian
Ocean) என அழைக்கப்பட்ட இலங்கை துரதிஷ;டவசமாக கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாகஇந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளி (Tear Drop of Indian Ocean) என்ற அடைமொழிக்கு உரித்தாக்கப்பட்து இந்த நாட்டைப் பற்றி நன்னோக்கில் சிந்திக்கும் அனைவருக்கும் பெருந்துயரம்தான்.
உல்லாசப் பயணிகள் என்று முன்னர் நாம் கருதிக் கொண்டிருந்தது வெளிநாட்டினரை மட்டும்தான்.
ஆனாரல் இப்பொழுது உல்லாசப் பயணத்துறையின் விசாலம் பொழுது போக்கை நாடி வரும் உள்நாட்டு மக்களையும் கருத்திற்கொண்டுள்ளது.
யுத்தத்pற்குப் பின்னர் உள்ளுர் உல்லாசப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது கடந்த 9 வருடங்களில் சுமார் 9 மில்லியன் உள்நாட்டு உல்லாசப் பயணிகள் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.
உலகிலேயே பாசிக்குடா, அறுகம்பே நிலாவெளி ஆகிய கடற்கரையோரங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
2020 ஆம் ஆண்டு 45 இலட்சம் வெளிநாட்டினர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு 23 இலட்சம் உல்லாசப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்து எமக்கு 2018 4 பில்லியன் அந்நிய செலராவணி ஈட்டித் தரந்துள்ளார்கள். இது இலங்கையின் மூன்றாவது பெரிய வருமானமாகும்.
எனவே, இளைஞர் யுவதிகள் இந்த உல்லாச தொழிற் துறையில் தொழில் வாய்ப்பக்களை பெற்றுக் கொள்வது மிக முக்கியமானது. தொழினுட்பத் தகைமைகள் இல்லாத நிலைமையை நீக்குவதற்கு தற்போதைய நைற்றாவின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
0 Comments:
Post a Comment