9 Dec 2025

செங்கலடி பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

SHARE

செங்கலடி பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கிராம மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் வெற்றியளிக்க கிராமிய மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வகையில்.அறிமுகப்படுத்தும்  பிரஜா சக்தி வேலைத்திட்டம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரருமான கந்தசாமி பிரபுவின். வழிகாட்டுதலில். இந்த பிரஜா சக்தி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கமைய. ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 39 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும். தெரிவு செய்யப்பட்ட. பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமன கடிதங்கள். வழங்கி வைக்கப்பட்டன. 

செங்கலடி பிரதேச செயலக  கேட்போர்  கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில். பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகக்  கலந்து கொண்டு இந்த பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கி வைத்தார். 

இந்த நிகழ்வில். விவசாய நீர்ப்பாசன அமைசச்சின்  மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், செங்கலடி பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசிங்கம் இப்பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர். எ.சுதாகரன் உள்ளிட்ட பல அதிகாரிகளும் இங்கு பிரசன்னமாய் இருந்தனர். 

கிராமிய மட்டத்தில் கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டின் அபிவிருத்தியில் தன்னிறைவு காண முடியும் என்ற நோக்கில் ஜனாதிபதி அனுரகுமாராவின் சிந்தனைக்கமைய இந்த பிரஜா சக்தி திட்டம் அமுல்;படுத்தப்பட்டு வரப்படுகின்றன. 

இந்த திட்டத்தின் மூலம். ஒவ்வொரு கிராமங்களும் அடிப்படையில் அபிவிருத்திகளை காணவிருக்கின்றன. இதன் தலைவர்களாக நியமனம் பெறுபவர்கள் ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய பொறுப்புடன் இந்த கடமையை நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: