மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய உயர்தர பெண்கள் பாடசாலையில் இவ்வாண்டுக்கான(2019) ஆய்வுகள்தினம் இடம்பெற்றது.
பொதுக்கல்வித்துறையில் அளவுரீதியானதும், பண்புத்தர ரீதியானதுமான அபிவிருத்தியை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சானது 2018 ஆம் ஆண்டு மார்ச்மாதம் 14 ஆம் திகதி முதல் பாடசாலை மட்டத்தில் ஆய்வுகள் தினத்தை சிறந்தமுறையில் ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது.
இதன்பிரகாரம் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் ஆய்வுகள்தினம் முதல்வர் திருமதி. கரன்னியா சுபாஹரன் தலைமையில் வியாழக்கிழமை (14) பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளர்களான கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி,பிள்ளை நலத்துறை துணைத்தலைவர் கலாநிதி.சி.அருள்மொழி,திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.ஞானரெத்தினம்,பிரதி அதிபர்களான பா.குமரகுருபரன், எஸ்.தவராசா, ஆசிரியர்களான திருமதி. மிருளாணி ஜெயதாஸ்,எஸ்.சிவநிதி மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆய்வுகள் தினத்தன்று அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சோதனை ஆய்வுகள் (Experimental Research) மற்றும் சமூகம்சார் ஆய்வுகளை பிரபல்யப்படுத்தி மாணவர்களிடத்தில் விஞ்ஞான ரீதியான ஆர்வத்தினை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தலே ஆய்வுகள் தினத்தின் நோக்கமாகும்.
சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் (1948-2019)நிறைவடைந்துள்ள நிலையில் கல்வி அபிவிருத்தி,இலவச கல்வியின் பயன்கள் அபிவிருத்தி அடைந்துள்ளவிதம்,ஆரம்ப மற்றும் இடைநிலை பாடவிதானங்கள் நடைமுறைப்படுத்துகையில் எழுந்துள்ள சிக்கல்கள்,சுதந்திரத்தின் பின்னர் பொருளாதாரம்சார், சமூகம்சார்,கல்விசார் அபிவிருத்தி போதுமானதா? அல்லது அவ்வாறு இல்லையாயின் அதற்கான தங்களது முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்,பொருளாதார அபிவிருத்தியில் கல்வியின் வகிபங்கு தற்காலத்தில் எவ்வாறு என்றும்,விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தில் வெளிப்படுத்தும் வீடியோக்கள், போட்டோக்கள்,ஆவணங்கள் காட்சிப்படுத்தலில் மாணவர்கள் விஞ்ஞானத்தின் ஆர்வத்தினை ஈடுபடுத்த ஊக்குவித்தல், தற்போதைய மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள படவேண்டுமென்றும்,ஆய்வுகள் என்றால் என்ன? அதன் நோக்கம்,அதன் வகைகள்,தற்காலத்தின் ஆய்வுகள் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது ? என்று துணைத்தலைவர் பல்லூடகத்தின் மூலம் மாணவர்களுக்கு தெளிவூட்டினார்.
“பல்கலைக்கழகத்தின் அனுமதியும்,கற்றல் நுட்பங்களும்" எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.ஞானரெத்தினம் விரிவுரைகள் மூலம் தெரியப்படுத்தினார்.குறிப்பாக பல்கலைக்கழகங்கள்,கல்வி நிறுவனங்கள்,தொழிற்கல்வி நிலையங்கள் பற்றியும்,அங்கு மாணவர்களுக்குரிய பாடரீதியான விடயங்கள்,எவ்வாறு விண்ணப்பிப்பது,மாணவர்களை தேர்ந்தெடுப்பது,கல்வியின் தற்கால நிலைப்பாடு, மாணவர்களை கல்விக்கு ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் ஆய்வுரீதியாக தெளிவூட்டப்பட்டது.
0 Comments:
Post a Comment