மட்டக்களப்பு மாவட்டத்தின் அஞ்சல் சேவைகளை வினைத்திறனுள்ளதாக முன்னெடுக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் 6 மாடிகளைக் கொண்ட புதிய அஞ்சல் கட்டிடத் தொகுதி நிருமாணிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண பிரதித் தபால் மா அதிபதி ஜெயனந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.
சனிக்கிழமை 23.02.2019 காலை 10 மணிக்கு மட்டக்களப்புக்கான புதிய 6 மாடிகளைக் கொண்ட அஞ்சல் நிருவாகக் கட்டிடத் தொகுதி நிருமாணத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெறவுள்ளது.
அஞ்சல் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம் இடம்பெறவுள்ள இக்கட்டிடத் தொகுதி நிருமாண அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அஞ்சல் சேவைகள் முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான எம்.எச். அப்துல் ஹலீம், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், உட்பட மட்டக்களப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சல் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 Comments:
Post a Comment