சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க திருகோணமலையில் விடுதி உரிமையாளர் சங்கம் அங்குரார்ப்பணம்
சுற்றுலாவில் வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் முகமாக திருகோணமலையில் சுற்றுலா விடுதி உரிமையாளர்களின் சங்கமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மூன்றாவது மைல் கல்லில் அமைந்துள்ள மாக்கோசா பே விடுதியில் செவ்வாய்க்கிழமை 2019.02.19 மாலை இச்சங்கத்தின் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.
இதில் உல்லாசப் பயணத்திற்கும் இயற்ரைகத் துறைமுகத்திற்கும் பெயர்போன நகரான திருகோணமலையில் இயங்கும் 52 உல்லாச விடுதிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு நிருவாகத்தைத் தெரரிவு செய்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 89 உல்லாச விடுதிகள் இயங்கி வருகின்றன.
பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக கே. ஜெயசீலன், பி. சுகுசாந்தன், ஏ. ஜெயசீலன், மருத்துவர் எஸ். கோகுலன், எஸ். அருட்செல்வம், ரமேஷ். நிக்கலஸ், ஆர்.எம். ஏ.பண்டார உட்பட இன்னும் சிலரும் நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.
தலைவர் ஆர். நித்திதரன், உப தலைவர் என். திருப்பதிதுரை, செயலாளர் சந்தியா பிரியதர்ஷினி, பொருளாளர் கே. நேமிநாதன், பொதுத் தொடர்பு அலுவலகர் பி. புஸ்ராஜன், தொடர்பாடல் பணிப்பாளர் ஸ்ரீசக்தீபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
0 Comments:
Post a Comment