24 Oct 2018

ஏறாவூர் நவீன பொதுச் சந்தை ஜனவரி மாதம் வியாபார நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகள் துரித நடவடிக்கை

SHARE
நிருமாணிக்கப்பட்டுவரும் ஏறாவூர் நவீன பொதுச் சந்தை அதன் வியாபார நடவடிக்கைகளுக்காக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டு பொதுச் சந்தை வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் கையளிக்கப்பதற்கான துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பொதுச் சந்தையின் நிருமாணப் பணிகள் குறித்த முன்னேற்றங்களைத் தெளிவுபடுத்துமாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகள் கொழும்பு தாருஸ்ஸலாம் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல்  23.10.2018 வருகை தந்து  முன்னேற்றங்கள் குறித்து விவரங்களைத் தெரிவித்தனர்.

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன பிரதிப் பொது முகாமையாளர் எந்திரி, பிரியானி கரவிட்ட (Deputy General Manager and Engineer of the State Engineering Cooperation)>, நிர்மாணப் பகுதிக்கான முகாமையாளர் எந்திரி எஸ்.ரி.பி. அழககோன், நிருவாக முகாமையாளர் எந்திரி சந்திமா ஹேரத், இணைப்புச் செயலாளர் எந்திரி ஏஆர்.எம். ரஸ்மின் ஆகியோர் இச்சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர்.

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன பிரதிப் பொது முகாமையாளர்  எந்திரி, பிரியானி கரவிட்ட (Deputy Director and Engineer of the Engineering Cooperation)> நிருமாணிக்கப்பட்டுள்ள ஏறாவூர் நவீன சந்தைக் கட்;டிடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் மின்சாரம், மலசல கூட வசதி உட்பட சுருள் கதவு (Rolling Gate போன்ற இணைப்பு வேலைகள் மாத்திரம் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளன.

இதற்கெனத் தேவைப்பட்ட 19 மில்லியன் ரூபாவை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கும் நகர திட்டமிடல் அமைச்சுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த மிகுதி வேலைகள் அடுத்த இரண்டு மாத காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டு ஜனவரி மாதம் பொதுச் சந்தை அதன் வியாபார நடவடிக்கைகளுக்காக இயங்கத் தொடங்கும்.

ஏறாவூர் நவீன சந்தை நிருமாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்படுத்தப்பட்ட அநாவசிய நெருக்கடிகளால் நிருமாணப் பணிகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்ய முடியாமல் சிறிது கால தாமதம் ஏற்பட்டு விட்டது வருத்தத்திற்குரியது.

ஆயினும். இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தாபனம் அதன் சக்திக்குட்பட்டு இந்த சந்தைக் கட்டிடத் தொகுதியின் நிருமாணப் பணிகளை உயர் தரத்திலும் சிறப்பானதாகவும் பூர்த்தி செய்வதில் அக்கறை கொண்டுள்ளது.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: