18 Oct 2018

அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் பிரதியமைச்சராகவும் இருந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்கொண்டு செல்கின்றேன் அலிஸாஹிர் மௌலானா

SHARE
அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் பிரதியமைச்சராகவும் இருந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்கொண்டு செல்வதாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை 18.10.2018 இடம்பெற்றது.‪
இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா உட்பட, அரச கூட்டுத்தாபன திணைக்களத் தலைவர்களும் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு தேர்தல் தொகுதியோடு இணைந்ததாக உள்ள ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பகுதிகளில் மக்கள் வாழ்வதற்கான குடியிருப்பு நிலங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன.

அப்படியிருக்கும்போது புன்னைக்குடா கடற்கரையை அண்டிய கடலோரப் பகுதிகளை மையப்படுத்திதாக ஆர்ட்டிலறி இராணுவத் தளத்தை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த விடயத்தில் பிரதேச சபை நிருவாகம், மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் தெளிவான மனநிலையுடன் அணுக வேண்டும்.

மக்கள் குடியிருப்பதற்கு ஒரு துண்டு நிலம் தேவை என்பது இன அடிப்படையிலன்றி மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும்.

சன அடர்த்தி உள்ள பிரதேசங்களில் எதிர்காலத்தில் இன்னும் குடியிருப்பு நிலங்களுக்குப் பற்றாக்குறை நிலவும்.

ஆகையினால், மக்கள் சன அடர்த்த pஉள்ள பிரதேசங்களை அண்டியதாக இராணுவத் தளங்களை அமைப்பதை எவரும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அதேபோன்றுதான் சகல அப்pவிருத்தித் திட்டங்களும் இன அடிப்படையிலன்றி பொதுவில் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

இந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடப்பாண்டில் மக்கள் பிரதிநிகளின் நிதி ஒதுக்கீடுகள், மத்திய, மாகாண அரசாங்க அபிவிருத்தித் திட்டங்களின் அமுலாக்கத்திற்காக ஒதுக்கப்படுகின்ற நிதியொதுக்கீடுகள் மற்றும் இன்னபிற பிரதேச அபிவிருத்தி தொடர்பான விடயங்கள், முன்னேற்றங்கள் பின்னடைவுகள் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டன.

SHARE

Author: verified_user

0 Comments: