18 Oct 2018

மட்டக்களப்பு மாவட்ட செயலக வாணி விழா

SHARE
மட்டக்களப்பு மாவட்ட செயலக வாணி விழா செவ்வாய்க்கிழமை மாவட்ட செலயக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இவ்வருட வாணி விழாவில், வின்சன்ட் மகளிர் தேசியப்பாடசாலை மாணவிகளின் நடன நிகழ்வுகள், தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவ மாணவிகளின் பஜனை நிகழ்வுகள் உள்ளிட்ட பாடசாலைகளின் மாணவிகளின் இசை, நடன நிகழ்வுகளும் நடைபெற்றன.

விழாவின் சிறப்பம்சமாக,  கலைவாணி கல்விக்கு ஆதாரம் வேலைத்திட்டத்தின் இவ்வருட உதவி வழங்கலாக 2019ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கு பாடசாலைகளில் இணையவுள்ள 12 மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வாணி விழா கொண்டாடப்படுகின்ற நிலையில் வாணி விழாவிற்கு சேகரிக்கப்படுகின்ற நிதியில் இருந்து எதிர்வரும் ஆண்டில் பாடசாலைக்கு முதலாம் ஆண்டுக்கு சேரவிருக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள  சிறார்களைத் தெரிவு செய்து அவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்கி கலைவாணி கல்விக்கு ஆதாரம் திட்டம் வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வாணி விழா கொண்டாடிய நிலையில் 2019ஆம் ஆண்டு பாடசாலைக்குச் செல்லவிருக்கும் 10 சிறார்களுக்கு புத்தகப்பைகள்  மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருமூலரை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை நெறிமுறைகள் என்ற தலைப்பிலான ஆன்மீகச் சொற்பொழிவினை வவுணதீவ பிரதேசத்தினைச் சேர்ந்த எஸ்.சுந்தர் நிகழ்த்தினார்.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், கணக்காளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள்,   மாவட்ட செலயக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: