18 Oct 2018

தமிழ் தேசிய உணர்வு கொண்ட கிழக்கு மாகாண எமது மக்களுக்கு ஒரு சரியான தலைமைத்துவம் இல்லை – கதிர்.

SHARE
கடந்த மூன்று நாட்களாக நான் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து அங்குள்ள அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், எமது அமைப்பின் உறுப்பினர்கள், உள்ளிட்ட பலரையும் சந்தித்துள்ளேன். இந்த சந்திப்புக்களிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவெனில் எமது மக்களுக்குரிய சரியான தலைமைத்துவம் இல்லாமலுள்ளது. தமிழ் தேசிய உணர்வு கொண்ட எமது மக்களுக்கு ஒரு சரியான தலைமைத்துவம் இங்கு காணப்படவில்லை. அரசியல் ரீதியாக தமிழர்களுடைய தலைமைத்துவம் இங்கு காணப்படுகின்றது என்ற கருத்து இருந்தாலும், உண்மையிலே எமது மக்கள் சரியான தலைமைத்துவத்தால் நிருவகிக்கப்படுகின்றார்கள் என்ற செய்து எமக்குக் கிடைக்கவில்லை.
என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் அமைந்துள்ள அக்கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் புதன்கிழமை (17) காலை நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவ்வமைப்பின் மட்டு அம்பாறை மாவட்டப் பெறுப்பாளர், உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது  அவர் மேலும் தெரிவிக்கையில்….

எமது மக்கள் கிழக்கில் வெறுமைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் காணப்படுகின்றார்கள். இந்த நிலை எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கின்றது என்றால் தமிழ் தேசியப் பற்றுக் கொண்ட எமது மக்கள் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு வருகின்ற அரசியல் தலைமைத்துவங்களால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி எமக்குக் கிடைத்திருக்கின்றது. 

உணர்வு பூர்வமாக தமிழர்கள் விடுதலையடைய வேண்டும், அதற்கான தாயகப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்து உழைத்த எமது மக்கள் இன்று தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். தென்னிலங்கை தேசம் எங்கள் மீது திட்டமிட்டு போடப்பட்டிருக்கின்ற அரசியல்சதி வலைக்குள் சிக்கி, தமிழ் தேசியம் பேசிக் கொண்டும், தமிழ் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டும், எதிரிகளுக்கு ஒட்டுக்குழுக்களாகவும், கைக்கூலிகளாகவும் செயற்படுகின்ற சில சக்திகள், எமது மக்களுடைய உரிமைப்போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து அதை விற்று காசு பிளைக்கும் நோக்குடன் அங்கே எமது மக்களை மாற்றி வருகின்றார்கள்.

இந்நிலமையை எமது மக்கள் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தொடர்பில் எமக்குத் தெரியவில்லை. இந்நிலையிலிருந்து மக்கள் தெழிவடைய வேண்டும். இது இவ்வாறு இருக்க தமிழர்கள் எதிர்காலத்தில் கிழக்குத் தலைமைத்துவத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற பொய்யான ஒரு மாயையை உருவாக்கி சிங்கள தேசத்திற்கு தீனிபோடும் குழு ஒன்றும் தங்களுடைய வேலையைக் கட்டவிழித்து விட்டுள்ளது.

இந்நிலையை எமது மக்கள் தெழிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிரிகளுடன் சேர்ந்து ஒட்டுக்குழுக்களாக இருந்து காட்டிக்கொடுத்து நயவஞ்சக வேலை செய்தவர்களுக்கு எமது மக்கள் துணைபோகாது எமது இளைஞர்கள், யுவதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஒன்றிணைந்து தமிழ் தேசியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வழிப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பங்காளிக் கட்சியாக இருக்கின்றோம், ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்ற சில அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகள் தற்போது பொய்யாகப்போய்க் கொண்டிருக்கின்றன. இதனை மக்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். 

தாயத்திலே வாழ்ந்துவிட்டு எதிரிகளின் கொலைவெறியாட்டத்திற்கு அஞ்சி புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு அஙகு உழைத்து எமது போராட்டத்திற்கு பெரும் ஆதரவு தந்த புலம்பெயர் வாழ் உறவுகளே! நாங்கள் இரத்தம் சிந்திப்போராடியபோது நீங்கள் அங்கு வியர்வை சிந்தி உழைத்தீர்கள் அக்காலத்தில் உங்களுடைய பங்களிப்பு மிக மிக முக்கியமானதாக இருந்தது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இங்கு ஒரு மாயை நிலை தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் எமது புலம் பெயர் சமூகத்தை மறந்து வாழ்கின்றோமா என்ற ஏக்க நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. எமக்கு பெரிதும் உதவிய எமது அந்த உறவுகளை நாம் ஒரு பொருளாதார மையமாக பார்ப்பதாகவும் அதனால் அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக நாம் அறிகின்றோம். உண்மையிலே அவ்வாறான ஒரு சூழல் இங்கு இல்லை, உங்களை யாரும் மறந்ததில்லை. போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியங்கள் மாறாது என்ற எமது அமைப்பினுடைய இலட்சியத்திற்கமைய உங்கள் இலட்சியங்களை நாம் இங்கு வென்றெடுப்போம். என்றோ ஒரு நாம் அது நிறைவேறும். எனவே நீங்கள் எம்மை தொடர்ந்து ஊக்கவிக்குமாறு வேண்டுகின்றேன்.

தமிழ்கள் அடக்கப்படுவதையோ, முடக்கப்படுவதையோ நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது இந்த மண்ணிலே தமிழர்களை சிங்களவர்கள் அடக்கு முறைக்குள்தான் வைத்திருப்போம் என்பதை சிங்களவர்கள் அண்மையில் அனுராதபுரத்தில் வைத்து எமது பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடந்து கொண்ட முறையில் தெரிவித்திருக்கின்றார்கள். இதில் தமிழ் தேசியம் பேசுகின்ற எமது அரசியல்வாதிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும். நாங்கள் மீண்டும் ஓர் முரண்பாடுகளுகளையோ, வன்முறைகளையோ விரும்பவில்லை.

அரசியல் கைத்திகளை வைத்து அரசியல் செய்கின்றார்களே தவிர அவர்களின் விடுதலை தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. இன்றுவரை எங்களுடைய எந்தவித முன்னாள் போராளிகளுக்கும் யாரும் வாழ்வாதார உதவிகளைச் செய்யவில்லை. சிலர் சிறு ஊக்குவிப்புத் தொகைகளை மாத்திரம் வழங்கியுள்ளார்கள், ஆனால் வாழ்வாதாரத்திற்காக எவரும் உதவி செய்யவில்லை. என அவர் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: