29 Oct 2018

நீண்ட காலத்திற்குப் பின்னர் சிரமதானம்

SHARE
மட்டக்களப்பு, புதூர் ஆலையடிச்சோலை மயானத்தைத் துப்புரவு செய்யும் பணிகள் திங்கட்கிழமை (29.10.2018) மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
புதர்கள் அடர்ந்த நிலையில் காணப்பட்ட இந்த மயானத்தை மரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்பு வழிபாட்டிற்காக துப்புரவு செய்து தருமாறு புளியந்தீவு மற்றும் புதூர் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

மாநகரசபை முதல்வரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான அ. கிருரஜன் மற்றும் இரா. அசோக் ஆகியோரின் ஏற்பாட்டில் துப்புரவு சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நொவெம்பெர் 02ம் திகதி மரித்த விசுவாசிகளினுடைய தினம் கத்தோலிக்க திருச்சபையினால் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மரித்த  அனைவரதும் நினைவாக இத்தினத்தில் திருப்பலிப் பூசைகள் மற்றும் வழிபாடுகள் என்பனவும் இடம்பெறும் இந்நிகழ்வில் மதகுருமார்களும், மக்களும் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: