21 Oct 2018

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் அமைந்துள்ள சுமார் 319 ஏக்கர் காணியை இலங்கை இராணுவம் கைப்பற்றவுள்ளது – முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியல் அமைந்துள்ள சுமார் 319 ஏக்கர் காணியை இலங்கை இராணுவம் கைப்பற்றவுள்ளதாக கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஏறாவூர் நகர சபையில் இன்று சனிக்கிழமை (20) ஏறாவூ பிரதேச முக்கியஸ்த்தர்கள், மற்றும் வர்த்தக பிரதிநிதிகள், கிராம பெரியோர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….. 
கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி, மற்றும், கிழக்குமாகாண ஆளுனர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் ஏறாவூர் புன்னக்குடாவில் அமைந்துள்ள காணியை இலங்கை இராணுவதிற்கு வழங்குதல் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் எதிர்வரும் திங்கட்கிழமையும் பி.ப 2 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் ஒரு கூட்டம் உள்ளது. இவ்விடையம்கூட தெரியாத பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலான ஊடகங்களுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார். 

இக்காணியை இராணுவதிற்கு எடுப்பதானது ஒரு பாரிய துராகச் செயலாகும், ஏறாவூர் பிரதேசம் 13200 வீடுகளையும், 52000 மக்களையும், 7.8 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவையும் கொண்டமைந்ததும், வலது பக்கமும், இடதுபக்கமும் தமிழ் சகோதரர்களும், தெற்குப்பக்கம் ஆற்றங்கரையும் கொண்டமைந்த நகரமாகும். இதனிடையே எமக்கு உள்ள ஒரே ஒரு இடம் இந்த புன்னக்குடா பிரதேசம் மாத்திரம்தான். இதனை இராணுவம் சுவீகரிப்பதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த இடம் மக்களுக்காகப் பாவிக்கப்பட வேண்டிய இடமாகும். 

எமக்கு எதுவித முரண்மபாடுகளும் சிவில் நிருவாகத்தில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டிய இடக்களையெல்லாம் அகற்ற வேண்டும்.  ஆனால் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் இராணுவ முகாம் அமைக்கக்கூடிய காணி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் அமைந்துள்ளன. அவற்றை விடுத்து எமது நகரத்தில் அமைந்துள்ள காணியை இலக்கு வைத்து அதனைச் சுவீகரிப்பதென்பது எமது சமூகத்திற்குச் செய்யும் தூரகமாகும்.

இராணுவம் இந்த காணிசுவீகரிப்பால் எதிர்காலத்தில் மக்கள் போக்குவரத்துச் செய்வதற்கு கஸ்ட்டமாக வரும் வேளையில் ஓர் இன முரண்பாடு தோற்றுவிக்கப்படலாம். எனவே இந்த நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். குறித்த காணி அமைந்துள்ள புன்னக்குடாப் பிரதேசம் ஏற்கனவே சுற்றுலாத்துறை மையமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. பாசிக்குடாவைப்போல் எதிர்காலத்தில் புன்னகுடாவையும் அபிவிருத்தி செய்து பொருளாதார மையமாக மாற்றலாம். இதனிடையே அவ்விடத்தில் இராணுவத்தைக் கொண்டு புகுத்துவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஏறாவூல் 70 வீதமானவர்கள் விவசாயத்தையும், மீன்பிடித்துறையையும் வாழ்வாதாரமாகக் கொண்டமைந்தவர்கள். புன்னக்குடாப் பிரதேசத்திலுள்ள மக்கள் மீன்பிடித் தொழிலைச் செய்பவர்கள், எனவே மனித புழக்கமாகவுள்ள குறித்த காணிப்பிரதேசத்தினுள் இராணுவ முகாம் வருவதென்பதை எந்த வித்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாத காரியமாகும். எனவே முஸ்லிம் சமூகமும் பதிக்கப்படாத வகையில் இந்த விடையத்தில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்கவேண்டும் என நாம் வேண்டிக் கொள்கின்றோம். 

இப்பகுதியில் உள்ள 319 ஏக்கர் நிலம் காணி ஆணைக்குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அக்காணி வர்த்தக மையமாக மாற்றப்படுவதற்காக முதலீட்டுச் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படுவதற்குமுரிய தீர்மானமும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இராணுவதினர் பலாத்காரமாக இக்காணியை சுவீகரிப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

எனவே இந்த இடத்தை ஏன் குறிப்பாக இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்ய வேண்டும் என்பது எமது கேள்வியாகும். இவ்விடையத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இக்காணியை இராணுவதினரின் சுவீகரிப்பிலிருந்து மீட்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: