சுற்றுலாத்துறையும் நலனோம்புகை மேம்பாடும் (Tourism and Hospitality) சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு சனிக்கிழமை (20) கிரிபோஜன் ரெஸ்டோரண்டில் இடம்பெற்றது.
இதன்போது இத்திட்டத்தை அமுல்படுத்தும் உணர்திறன் நுண்ணறிவுக்கான வாழ்க்கைத் திறன் பயிற்சிக் குழு (Emotional Intelligence life Skills Training
Team) திட்ட பணிப்பாளர் வே.மனோகரன், இணைப்பாளர் எம்.எஸ்.எப். ஷாமிர், முகாமைத்துவப் பணிப்பாளர் பிரசாத் ஜெயசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதோடு, சிந்தியா நிலுக்சினி, சப்ரகமுவ பல்கலைக் கழகப் பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம், த.சக்திவேல் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கங்களை வழங்கினர்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி அனுசரணையுடனும் இலங்கை விஞ்ஞான தொழினுட்ப அமைச்சின் பங்களிப்புடனும் இத்திட்டம் இலங்கையில் அமுலாகிறது.
சுற்றுலாத்துறையும் நலனோம்புகை மேம்பாடும் சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டும் செயலமர்வுகள் ஏற்கெனவே அம்பாறை திருகோணமலை பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு நடபாத்தப்பட்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் “உள்வாங்கல் வளர்சிக்கான ஆற்றல்” திட்டத்தின் Skills for Inclusive Growth மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையும் நலனோம்புகை மேம்பாடும் என்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முக்கிய தடைகள் அவற்றை சீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டங்கள் குறித்து இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment