9 Sept 2018

எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழா கோலாகலமாக ஆரம்பம்

SHARE
எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழா மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (07) மாலை கொம்பு முறி விளையாட்டுடன் முதலாம் நிகழ்வு ஆரம்பமாகியது.
தொடர்ந்து இரண்டாம் நாளாகிய சனிக்கிழமை (08) மிகவும் கோலாகலமான முறையில் களுதாவளை கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது.

துறைநீலாவணை, கோட்டைக்கல்லாறு, எருவில், மகிழூர், களுவாஞ்சிகுடி, மற்றும் செட்டிபாளையம், ஆகிய இடங்களிலிருந்து கண்ணகி கலை இலக்கியத்தைச் சித்தரிக்கும் ஊர்வலங்கள், கோலாட்டங்கள், என்பன மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிவழியாக ஊர்வலமாக களுதாவளை கலாசார மண்டபத்தை வந்தடைந்தது.

பின்னர் களுதாவளை கலாசார மண்டபத்தில் அமைக்கப்பட்ட கூலவாணிகன் சாத்தனார் அரங்கில் நிகழ்வுகள் 9 மணிக்கு ஆரம்பமாகின. 

விழாக்குழுவின் தலைவர் ப.குணசேகரம் தலைமையில ஆரம்பமான இந்நிகழ்வில் தமிழ் மொழிவாழ்த்து, கண்ணகி கலை இலக்கிய விழாக் கீதம், அரங்க அறிமுகம், கண்ணகி கலை இலக்கிய பட்டயம் வாசித்தல், தொடக்கவுரை, கூடல் பரல் மலர் வெளியீடு,  போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்று முதல் அமைர்வு 11 மணியளவில் நிறைவு பெற்றன.

தொடர்ந்து இரண்டாம் கலை அமர்வு 11.15 மணிக்கு சதாசிவ ஐயர் அரங்கில் விழாக்குழு உறுப்பினர் பெ.புவனசுந்தரம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போதும், வசந்தன் கவித்திரட்டு மீள்பதிப்பு வெளியீடு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசிலகள் வழங்கல், ஓவியக் கண்காட்சி, என்பவற்றோடு ஆரப்பமாகியது.

நடைபெற்ற இந்நிகழ்வில் இலக்கிய வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
























































SHARE

Author: verified_user

0 Comments: