ஜனாதிபதி சுற்றாடல் விருதில் வெள்ளி விருது பெற்று பெற்ற களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை.
“அழகான தீவு - சமாதானமான மக்கள்” என்ற கருப்பொருளின் கீழ், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்துடன் இணைந்து மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடத்தப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுக்கான போட்டியில், வைத்தியசாலைகளுக்கான விசேட பிரிவில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை சுற்றுச்சூழல் முகாமைத்துவத்திற்கான வெள்ளி விருதைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த 23.10.2025 அன்று கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது 2025 இற்கான விருது வழங்கும் விழாவில் வைத்திய களுவாஞ:சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.புவனேந்திரநாதன் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலை சார்பில் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
இவ்வெற்றியானது எமது வைத்தியசாலையின் அனைத்து பணியாளர்களினதும் ஒருங்கிணைத்த உழைப்பிற்கான வெற்றி என்பதில் பெருமிதமடைகின்றோம். குறிப்பாக எமது வைத்தியசாலையின் தர முகாமைத்துவப் பிரிவு, தொற்றுத் தடுப்புப் பிரிவு மற்றும் சுத்திகரிப்புப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் இவ்வெற்றிக்கான உத்துகோலாக அமைந்தது.இச்சுற்றாடல்சார் செயற்பாட்டினூடாக எமது வைத்தியசாலைக்கான காபன் அடிச்சுவடு, நீர் அடிச்சுவடு, கழிவுநீர் சுத்திகரிப்பு, கழிவு முகாமைத்துவம், நோயாளர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பணியாளர் பாதுகாப்பு போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அவற்றுக்கான கொள்கைத் திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இத்திட்டத்தில் நாம் வெற்றிகண்டுள்ளோம். நாம் அவதானித்த சிறிய சிறிய குறைபாடுகளை நிவத்தி செய்துகொண்டு தொடர்ந்தும் வெற்றியை நோக்கி பயணிப்போம்.
இவ்வெற்றிக்காக அயராது உழைந்த எமது வைத்தியசாலையின் அனைத்து தர பணியாளர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.
மேலும், இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஊக்குவித்து ஒத்துழைப்பு வழங்கிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் அவர்களுக்கும், பிராந்திய தர முகாமைத்துவப் பிரிவினருக்கும், எமது செயற்பாடுகளின் முன்னெடுப்பில் என்றென்றும் உறுதுணையாக நிற்கும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கும், செயற்பாட்டுத் திட்டங்களுக்கான நன்கொடையாளர்களுக்கும், அவசியமான வேளையில் அறிவுரைகளை வழங்கிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு காரியாலய உத்தியோகத்தர்களுக்கும், எமது வைத்தியசாலையின் பசுமைச் சூழலினைப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் எமது சேவை பெறுநர்களாகிய பொதுமக்களுக்கும் எமது வைத்தியசாலை சார்பாக உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பசுமைமிக்க, சுத்தமான மற்றும் நிலையான தேசம் நோக்கிய முன்னேற்றப் பயணத்தில் யாவரும் ஒன்றிணைவோம். ஏன களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment