அரசு ஒசுசலவின் 67 வது கிளை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பு.
இலங்கை அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின், அரசு ஒசுசலவின் 67 வது கிளை மட்டக்களப்பு நகரில் திருகோணமலை வீதியில் வெள்ளிக்கிழமை(31.10.2025) திறந்து வைக்கப்பட்டது.
மக்களுக்கு மருந்து பொருட்களை நியாய விலைககளிலும், தரமான பொருட்களையும் பெற்றுக் கொடுக்கும் வகையில், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நாடாளவியரீதியில் அதன் கிளை களை நிறுவி வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்ட கால தேவையாக இருந்து வந்த இக்கோரிக்கையை தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இம்மாவட்டத்திர் முன்னர் அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்த வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
பிரதி அமைச்சர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக தற்போது இக்கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசு மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டாக்டர்.மனோஜ்.சி.வீரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச் சந்திரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைபவர் ரீதியாக இந்த ஒசு சலவின் 67வது கிளையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன். மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன்ஈ மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எஸ்.தனஞ்ஜயன் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா….
இப்பிரதேச மக்களின் நீண்டகால தேவையாக இருந்த அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கிளையின் அவசியம் சுமார் 50 வருடங்களின் பின்னர் நிறைவேறியிருப்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். எதிர்காலத்தில். இந்த நாட்டு சிறந்த வைத்திய வசதிகளை பெற்றுக் கொடுக்கவும் தரமான மருந்து பொருட்களை இறக்குமதி செய்து கொடுக்கவும். அரசாங்கம் கூடிய முயற்சி எடுத்து வருகின்றது.
கடந்த காலங்களில் சுகாதார அமைச்சர்களாக செயல்பட்டவர்கள். தரம் குறைந்த மருந்துகளை கொள்வனவு செய்து மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள். இந்தக் கொள்ளைகளை முறியடிக்க எமது அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
எதிர்காலத்திலும் இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை தவிர்த்து இந்த நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பிரஜைகளாக வருவதற்கு தேவையான சகல வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தலைமையிலான அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment