மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் இன்று வெள்ளிக்கிழமை (07) பூரண கர்த்தால் அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு – பதுளை வீதி பெரியபுல்லுமலையில் அமைக்கப்பட்டு வருகின்ற போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் ஏற்கெனவே வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன் இந்த கர்த்தாலுக்கு தமிழ் அரசியல்வாதிகள், மற்றும் பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள் என்பன தமது பூண ஆதரவை வழங்குவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை தனியார் போக்குவரத்துக்கள் எதும் இடம்பெறவில்லை, இலங்க போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஒரு சில போருந்துகள் மாத்திரம் சேவைலயிலீடுபட்டு வருவதோடு அதில் பயணிகள் மிக மிகக் குறைவாக உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ள போதிலும், மாணவர்கள் எவரும் சமூகம் கொடுத்திருக்கவில்லை, மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களும், இயங்கவில்லை. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதிகள் எங்கும் வெறிச்சோடிக் காணப்படுகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.
வழமையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் நகரப் பிரதேசங்கள் வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகைக்காக மூடப்படுவதோடு வெறிச்சோடியும் காணப்படுவது வழக்கமாகும்.
0 Comments:
Post a Comment