மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட எல்லைப்புறக் கிராமங்களில் தொடர்ந்து காட்டு யானைகளின் தாக்குகதல்கள் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை (29) கண்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய தவராசா குணராசா என்பவர் இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கி பரிதாபகரமாக உயிரிழந்திருந்தார் இவரி உயிரிழப்பு இடம்பெற்று இரண்டு நாட்களுக்குள் வெள்ளிக்கிழமை (31) அப்பிரதேசத்தில் அமைந்துள்ள மாலையர்கட்டு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் லயனிதன் என்ற இளைஞன் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி இஸ்த்தலத்திலே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு நாளாந்தம் போரதீப்பற்றுப் பிரதேசத்தில் ஒவ்வொருவராக கொன்றுவரும் காட்டு யானைகளைத் துரத்துவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரையில் ஓர் தீர்க்கமான முடிவு எடுக்கப்படாமலிருப்பது மிகுந்த வோதனையளிப்பதாக போரதீவுப்பற்று பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் கடந்த கடந்த காலத்தில் நிலை கொண்டிருந்த யுத்த சூழல் நீங்கி தற்போது மக்கள் மெல்ல மெல்ல மிளிர்ந்து கொண்டு வரும் நிலையில் நாளாந்தம் இவ்வாறு காட்டு யானைகளினால் அப்பாவி உயிர்கள் கொல்லப்படுவதை அதிகாரிகள் கண்மூடிக் கொண்டு பார்த்திருக்கின்றார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச சிவில் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாம் அறிவித்துள்ளதாகவும், இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் துரிதமாக மிகவிரைவில் கூடி ஆராய்ந்து போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள காட்டு யானைகளை அப்புறப்பதுத்துவதுவதை நடைமுறைப்படுத்த தாம் முயற்சித்து வருவதாகவும் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் ரஜனி தெரிவித்தார்.






0 Comments:
Post a Comment