3 Sept 2018

கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழக வருடாந்த கிரிக்கட் சுற்றுப்போட்டி-2018

SHARE
கோல்டன் ஈகிள் விளையாட்டுக் கழகத்தின் 30வது ஆண்டினை சிறப்பிக்கு முகமாகவும் மறைந்த கழக உறுப்பினர் ஏ. புவிராஜாவின் 13வது ஆண்டை நினைவுகூறும் முகமாகவும் கிரிக்கட் சுற்றுப் போட்டியினை எதிர்வரும் 22, 23, 24, 29, 30-2018 ஆகிய தினங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே இச்சுற்றுப் போட்டியில் விளையாட்டுக் கழகங்களைப் பங்குபற்றுமாறு பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போட்டி விதிமுறைகள்
•  அணிக்கு 09 பேர் கொண்ட 10 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட லீக் முறையிலானது.
•  போட்டிகள் யாவும் சர்வதேச விதிக்கமைவாக நடைபெறும்.
•  ஒரு அணியில் 02 வீரர்கள் மாத்திரமே மேலதிகமாக இணைத்துக்கொள்ளமுடியும்.
•  பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது சர்வதேச விதிக்கு முரணாக பந்து வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

•  போட்டிகளில் கலந்து கொள்ளும் கழகங்கள் பந்து மற்றும் துடுப்பாட்ட மட்டைகள் என்பவற்றை கொண்டுவருதல் வேண்டும்.
•  போட்டிகள் கோல்டன் ஈகிள்; மைதானம் உட்பட மேலும் இரு மைதானங்களில் இடம்பெறும்.

•  சகல விதமான முறையற்ற பந்து வீச்சுகளுக்கம் குசநந ர்வை வழங்கப்படும்.
•  போட்டியில் பங்குபற்றும் வீரர்கள் அணைவரும் நீளக்காட்சட்டை (டீழவவழஅ) ரீசேட் அணிதல் வேண்டும்.

•  அனுமதிக்கட்டணமாக ரூபா 4000.00  அறவிடப்படும்.
•  பதிவு கட்டணமாக ரூபா 2000.00 செப்ரம்பர் 10 ஆம் திகதிக்கு முன் செலுத்தி பதி செய்தல் வேண்டும்.

•  ரி.ராஜ்குமார் கணக்கு இல 8105008978 எனும் மட்டக்களப்பு கொமர்சல் வங்கி கணக்கில் வைப்பிலிடவும்

•  0763536047 என்ற whatsap இலக்கத்திற்கு பற்றுச்சீட்டினை அனுப்பிவைக்கவும்
•  மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழகத்தையே சாரும்
பரிசு விபரங்கள்

1ம் இடம்

•  புவிராஜா சவால் கிண்ணம்

•  1ம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணம்
•  ரூபா 50000.00  பணப்பரிசு
•  1ம் இடம் பெறும் கழகத்தின் 11 வீரர்களுக்கமான வெற்றிக்கிண்ணம்.

2ம் இடம்

•  வெற்றிக்கிண்ணம்
•  ரூபா 20000.00 பணப்பரிசு

3ம் இடம்

•  வெற்றிக்கிண்ணம்
•  ரூபா 10000.00  பணப்பரிசு

4ம் இடம்

• வெற்றிக்கிண்ணம்
•  ரூபா 5000.00  பணப்பரிசு

சிறப்பு பரிசில்கள்

•  காலிறுதி போட்டிகளில் இருந்து ஆட்டநாயகன் விருது
•  தொடரின் சிறந்த பந்து வீச்சாளர் விருது.
•  ஒரு போட்டியில் அதிக கூடிய ஓட்டம் பெறும் வீரருக்கான விருது
•  இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனுக்கான விருது
•  தொடர் ஆட்ட நாயகனுக்கான விருது மேலும் பல பரிசுகளும் வழங்கப்படும்
•  விரைவாக 50 ஓட்டங்களை பெறும் வீரருக்கான விருது
•  மேலும் பல பரிசுகளும் வழங்கப்படும்
தொடர்புகளுக்கு
ரீ. ராஜ்குமார்     - 0772100851, 0763536047
ரீ. தரணிராஜ்     - 0771149969

SHARE

Author: verified_user

0 Comments: