யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைகள் குறித்து பிரதேச செயலாளரின் தலைமையில் அரச அதிகாரிகள் குழு நேரில் சென்று ஆய்வு ஒன்று இன்று வியாழக்கிழமை (13) மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் எல்லைப் புறக்கிராமங்களில் ஒன்றாகக் காணப்படும் புதுமுன்மாரிச்சோலை எனும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
அப்பிரதேசத்தின் எல்லையில் காணப்படும் புதுமுன்மாரிச்சோலைக் கிராம மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது அப்பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள நிலையில் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தற்போது மெல்ல மெல்ல பூர்த்தியாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் அப்பகுதி மக்களிடத்தில் காணப்படும் குiபாடுகளைக் கேட்டறிந்து அதற்குத் தேவையான தகுந்த நடிவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வேண்டி போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகியின் முயற்சியினால், துறைசார்ந்த அனைத்து திணைக்கள அதிகாரிகள், உத்தியோகஸ்த்தர்களையும் அப்பகுதி மக்களின் காலடிக்குக் கொண்டு சென்று மக்களிடத்தில் காணப்படும் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போது குடிநீர் பிரச்சனை, புணருத்தாரணம் செய்யவேண்டிய வீதிகள், போக்குவரத்து, மின்விளக்கு, காட்டு யானைகளின் பிரச்சனை, வீடில்லாப்பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு அக்ககுதி மக்கள் நேரில் தெரிவித்தனர்.
இப்பகுதியில் வீடற்றிருந்த 52 குடும்பங்களுக்கு கடந்த காலத்தில் இந்தியன் வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ள. தற்போது மேலும் 77 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதற்குரிய பெயர் பட்டியலைப் பெற்றுள்ளோம். தற்குரிய அனுமதி இவ்வருட இறுத்திக்குள், அல்லது அடுத்தவருடத்திற்குள் கிடைத்துவிடும். இவற்றினைவிட இப்பகுதியிலுள்ள ஒருசிலர் சட்டவிரோத மதுபான வின்பனையில் ஈடுபடுவதாகவும் எமக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறான செயல்களிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். என இதன்போது பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இந்த மக்கள் சந்திப்பில், பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச சபைத் தவிசாளர் யோ.ரஜனி, மற்றும் ஏனைய திணைக்களங்களின் உத்தியோகஸ்த்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மக்கள் அரச அதிகாரிகளுக்கு தாங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை முன்வைத்தனர். குறிப்பிட்ட சில பிரச்சனைகளுக்கு அரச அதிகாரிகளினால் அவ்விடத்திலே தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டதோடு, ஏனைய பிரச்சனைகளுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு பெற்றுத்தரப்படும் என இதன்போது மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment