"தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் 2018" முன்னிட்டு அதன் ஆரம்ப நிகழ்ச்சி 18092018 அன்று காலை 8 மணிக்கு திருகோணமலைசுப்ரா பூங்காவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருமலை அரசாங்க அதிபர், பிரதம செயலாளர் கிழக்கு மாகாணம்,, நகர சபை தலைவர், பிரதேச சபை தலைவர்,, பிரதேச செயலாளர், ரோட்டரி கழக
அங்கத்தவர்கள், இராணுவ அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு
பற்றினார்கள்
டோக்கியோ சிமெண்ட்
கம்பெனி அனுசரணை வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில்
உரையாற்றிய திருமலை அரசாங்க அதிபர் புஷ்பகுமார, திருகோணமலையில் உள்ள சகலரும்
தாங்கள் வாழ்கின்ற சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் எதிர்கால சந்ததிகளான
தங்கள் பிள்ளைகளை நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
விருந்தினர்கள்
இராணுத்தினதும் மாணவர்களின் உதவியுடன் மட்டிகளி பகுதியை துப்பரவு செய்தார்கள்.
திருகோணமலை பிரதேச சபை ஊழியர்களும் உறுப்பினர்களும் அலஸ் தோட்ட கடற்கரை
பகுதியை துப்பரவு செய்தார்கள்






0 Comments:
Post a Comment