சிரேஸ்ட ஊடகவியலாளரும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான இரா.துரைரத்தின் செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிறு காலை 09.00 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி கல்வி அபிவிருத்தி சபை மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற உள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம், கௌரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நூல் வெளியீட்டுரையினை முன்னாள் மண்முனை வடக்கு கோட்ட கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரனும் விமர்சன உரைகளை தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஓய்வுநிலை கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராசா, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளரும் ஊடக ஆய்வாளருமான எஸ்.மோசேஸ் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.
இதே வேளை நூல் அறிமுக விழா ஓகஸ்ட் 4ஆம் திகதி மாலை 5மணிக்கு கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் சிலோன்ரூடே பத்திரிகையின் செய்தி ஆசிரியருமான அனந்த பாலகிட்ணர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவுக்கு இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகையின் ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நூல் வெளியீட்டுரையினை தினக்குரல் வார இதழ் பிரதம ஆசிரியர் ஆர்.பாரதியும் விமர்சன உரையினை சட்டத்தரணி எம்.மங்களேஸ்வரி, சிறப்புரையினை கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன் ஆகியோரும் நிகழ்த்த உள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் அதிதிகளாக கலந்து கொள்ள உள்ளனர்.
0 Comments:
Post a Comment