1 Jul 2018

வறுமை நிலை தொடர்பில் நேரடியாக ஆராய்வு

SHARE
மட்டக்களப்புக்கு வருகை தந்த சமூக வலுவூட்டல் அமைச்சர் பீ. ஹரிசன் சமுர்த்தி அதிகாரிகளையும் சமுர்த்தி பயனாளிகளையும் சந்தித்து   வறுமை நிலை தொடர்பில் நேரடியாகக் கேட்டறிந்து கொண்டார்.
சனிக்கிழமை (30.06.2018) மட்டக்களப்பு கல்வியற் கல்லூரி மண்டபத்தில்  இடம்பெற்ற இந்த முக்கியத்தும் மிக்க பிரதான நேரடி சந்திப்பில் சமுர்த்தி அதிகாரிகளும் சமுர்த்தி பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இலந்துரையாடலில் சமுர்த்தி திட்டத்தை எதிர்காலத்தில் வறிய மக்களுக்குள் உள்வாங்கி  அவர்களை வறுமையிலிருந்து விடுவித்து வலுப்பெறச் செய்யும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அதிகாரிகள் முழு மூச்சாகச் செயற்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

கலந்துரையாடலைத் தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகல் வெல்லாவெளி பிரதேசத்திற்குச் சென்று சமுர்த்தி பயனாளிகளையும் அமைச்சர் குழுவினர் சந்தித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்,  தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கடற்றொழில் நீரியல்வள, கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், சீ. யோகேஸ்வரன், சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் பீ.எஸ். வீரக்கோன் மற்றும் சமூர்திப் பணிப்பாளர் நாயகம் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: