அரங்கம் ஊடக அமைப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒருநாள் பயிற்சிப் பட்டறை ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (01) நடத்தியது.
மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் தமிழ் ஊடகவியளார் ஒன்றியத்தின் தலைவர் அனந்த பாலக்கிட்னன், மற்றும், அரங்கம் பத்திரிகையின் ஆசிரியர் பூ.சீவகன், சிரேஸ்ட ஊடகவியளார்களான இ.பாரதி, மோசஸ், இரா.துரைரெத்தினம், மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு உடகவியளார்களுக்கு கருத்துக்கைளையும், ஆலோசனைகளையும், வழங்கியதோடு, பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு செய்திகளை அனுப்பும்போது கவனிக்கப்பட வேண்டிய விடையங்கள், கட்டுரைகளை எழுதும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடையங்கள், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் மிகவும் தெழிவாகவும், விரிவாகவும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment