மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை பிள்ளையாரடி எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை 01.07.2018 விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரும் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கனரக லொறியொன்றும் முச்சக்கரவண்டியும் மோதிக் கொண்டதிலேயே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்றவுடன் நெடுஞ்சாலையில் பயணித்தவர்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியோர் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
0 Comments:
Post a Comment