மட்டக்களப்பு சிவானந்தா தேசியப்பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மாணவர்களும் பழைய மாணவர் சங்கத்தினரும் இணைந்து நடத்துகின்ற ஆற்றல் - கல்விக் கண்காட்சி திங்கட்கிழமை (02) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (03) மாலை வரை நடைபெறவுள்ள இக் கண்காட்சியினை மட்டக்களப்பு கல்வி வலய நிருவாகததிற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மாணவர்களின் ஆற்றலையும், அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சியில், மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு ஆக்கங்களும் படைப்புக்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
சிவானந்தா தேசியப்பாடசாலை அதிபர் ரி.யசோதரன் தலைமையில் நடைபெற்ற இவ் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் பாண்டு வாத்தியம் முழங்க வரவேற்கப்பட்டு, தேசியக் கொடி ஏற்றப்பட்டதையடுத்து வழிபாடுகள் நடைபெற்று கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.
சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே.அருள்பிரகாசம், ஆரம்பப்பிரிவுக்குப் பொறுப்பான வலயக்கல்வி உதவிப்பணிப்பாளர் ஆர்.பாஸ்கரன், பாடசாலைகளின அதிபர்களும் பங்கு கொண்டனர்.
ஓவியம், விளையாட்டு, வாழ்க்கைமுறை, இசை, கலை, கூட்டெரு, கைத்தறி, விவசாயம், மீன்பிடி, நீர்த்தாவரங்கள், இலங்கை, புவியியல், சாரணியம், மட்பாண்டம், கைவேலைகள் இயற்கை வாயு, இலைக்கஞ்சி, உள்ளிட்ட பல்வேறு துறைசார் காட்சிப்படுத்தல்களுடன் நடைபெறும் இக் கண்காட்சியினை மட்டக்களப்பிலுள்ள பாடசாலைகளின் மாணவ மாணவிகளும் பார்வையிட்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment