மட்டக்களப்பு – வாகரைப் பொலிஸார் மேற்கொண்ட திடீர் வழிமறிப்பு சோதனையின்போது சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட ஒரு தொகுதி மரக்குற்றிகளைக் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக காட்டு மரங்கள் கடத்தப்படுவதாக வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து சனிக்கிழமை 30.06.2018 திடீர் வழிமறிப்பு சோதனை பனிச்சங்கேணி பாலத்தடியில் மேற்கொள்ளப்பட்டது.
அப்பொழுது படி ரக வாகனம் ஒன்று சோதனையிடப்பட்டபோது அதனுள்ளிருந்து பெறுமதி மிக்க 14 முதிரை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன.
இவை நகரப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று மரத்தளவாடங்கள் செய்வதற்காக பயன்படுத்துவதற்குப் கடத்தி வரப்பட்டிருந்தன என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழிமறிப்பு திடீர் சோதனை நடவடிக்கையில் வாகரை போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.கே. பிரசன்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment