இலங்கையில் இடராயத்த முகாமைத்துவ இயலளவை அதிகரிப்பதற்கான கருத்தரங்கிலும் கள கற்கையிலும் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து செயற்பாட்டாளர்களான 10 துறைசார்ந்த நிபுணர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஆசிய இடராயத்த நிலையத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் சமரவிக்ரம கங்கா சஜீவனி தெரிவித்தார்.
இக்கருத்தரங்கும் கள கற்கையும் ஜுன் 25 தொடக்கம் 27ஆம் திகதிவரை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மனிலாவில் இடம்பெறுகின்றது.
ஆசிய இடராயத்த நிலையமும் வுhந யுளயைn னுளையளவநச Pசநியசநனநௌள ஊநவெசந பில் அன்ட் மெலிந்தா கேற் மன்றமும் டீடைட யனெ ஆநடiனெய புயவநள குழரனெயவழைn இணைந்து இலங்கையில் அரசாங்கம், உள்ளுர் மனிதாபிமான சேவைகள் அமைப்புக்கள் மற்றும் தனியார்துறை என்பவனற்றின் இடர் முகாமைத்துவம் மற்றும் இடர் முன்னாயத்தங்களை ஆக்கபூர்வமான முறையில் தயார்படுத்தும் இயலளவை வலுப்படுத்துவதற்காக இந்த கருத்தரங்கையும் கள கற்கை அனுபவங்களையும் பெறும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.
இடர்கள் ஏற்படும்பொழுது அவற்றுக்குத் தக்க முன்னாயத்தங்களை மேற்கொள்வதற்கும் இடர்பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்கும் தோதான ஏற்ற வழிமுறைகளை ஆக்கபூர்வமாகக் கையாள்வதில் பிலிப்பைன்ஸ் நாடு முன்னுதாரணமாகத் திகழ்கிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையும் அடிக்கடி கன மழை, பெருவெள்ளம், மண்சரிவு, சூறாவளி. வற(ர)ட்சி உள்ளிட்ட இயற்கை இடர்களை எதிர்கொண்டு வருவதால் ஆக்கபூர்வமான இடர் முன்னாயத்தங்களையும் இடரிலிருந்து மீண்டெழுவதற்கான அனுபவக் கற்கைகளையும் தொழினுட்ப ஆலோசனைகளையும் பெறும் பொருட்டு இலங்கையிலிருந்தும் துறைசார்ந்த செயற்பாட்டாளர்களும் நிபுணர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஆசிய இடராயத்த நிலையம் தெரிவித்துள்ளது.
இக்கருத்தரங்கிலும் கள கற்கை அனுபவத்திலும் பங்குபற்றுவதற்காக இலங்கை இடர் முகாமைத்துவ நிலையத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் சமரக்கொடி றொஹான் பிறியந்த, அவசர நிலைமை நடவடிக்கைகள் பிரதிப் பணிப்பாளர் ஜே.எம்.ஏ. ரவீந்திர ஜயரத்ன, விழிப்புணர்வு கல்விப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஷான் பத்திரன மற்றும் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதியாக அனுலா அன்ரன் ஆகியோர் உள்ளிட்ட 10 துறைசார்ந்த நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment