21 Jun 2018

கைத்தறி நெசவு உற்பத்திக் கண்காட்சி

SHARE
சிறிய மற்றும் நடுத்தர கைத்தறி நெசவு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின்; கண்காட்சியும் விற்பனையும் சனி மற்றும் ஞாயிறு (ஜுன் 23, 24) ஆகிய இரு தினங்களும் மட்டக்களப்பு பிறிட்ஜ் மார்க்கற் கல்லடிப் பால சந்தையில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு தினங்களிலும் சுமார் 27 சிறிய மற்றும் நடுத்தர கைத்தறி நெசவு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின்; கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறுவதோடு, விவாத அரங்கு, தகவல் பகிர்வு சந்தைத் தொடர்புகள் மற்றும் வலைத் தொடர்பு வாய்ப்புக்களும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர கைத்தறி நெசவு தொழில் முயற்சியாளர்கள், உற்பத்தியாளர்கள், தொழிலதிபர்கள், கூட்டுறவுத் தாபனங்கள், வர்த்தக சேவை வழங்குனர்கள், தொடர்புபட்ட அரசாங்க ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், பொருளாதார தொழில்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கைத்தொழில்துறையை முன்னேற்றுவதே  இதன் நோக்கமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: