கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக சூரியகலத்தில் இயங்கக்கூடிய ஏற்று நீர்ப்பாசனத்திட்டம். கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக சூரியகலத்தில் இயங்கக்கூடிய ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் களுதாவளையில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு விவசாய அமைப்பின் தலைவர் கு.பிரதாபன் தலைமையில் புதன்கிமை (27) நடைபெற்றுது.
கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சினால் குறித்தொகுக்கப்பட்ட 8.6 மில்லியன் ரூபாய் நிதி இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக பொறியலாளர் கு.செந்தூரன் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியலாளர் எஸ்.திலகராஜன், மாகாண பிரதி பணிப்பாளர் பொறியலாளர் ஏ.இராஜகோபாலசிங்கம், மட்டக்களப்பு நீர்ப்பாசன பிரிவுக்கு பொறுப்பான பொறியலாளர் கு.செந்தூரன், செங்கலடி நீர்ப்பாசன பொறியியலாளர் அ.பிரசாந்தன், அகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறித்த ஏற்று நீர்ப்பாசனத்திட்டத்தின் ஊடாக சுமார் 460 ஏக்கர் நெற் செய்கையும் 160 ஏக்கர் மேட்டுநிலக்காணியில் உப பயிர்ச்செய்கையும் தங்குதடையின்றி மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் இதன்போது தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment