மட்டக்களப்பு அரசடி 10 ஆம் வட்டாரத்தில் உள்ள சோனகர் தெரு, கொலன் தெரு ஆகிய வீதிகளுக்கு மின் விளக்குப் பொருத்தும் நடவடிக்கைகள் செவ்வனே செய்து முடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச முஸ்லிம்களும் பள்ளிவாசல் நிருவாகத்தினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
தற்சமயம் புனித றமழான் நோன்பு காலம் ஆரம்பித்துள்ள நிலையில் நீண்டகாலமாக இருளில் மூழ்கிக் கிடந்த அந்த வட்டாரத்தில் இரவு நேரத் தொழுகை மற்றும் இதர வணக்க வழிபாடுகளுக்குச் செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டிருந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு தெருக்களில் அசௌகரியமின்றிச் செல்வதற்கு வசதியாக இருளில் மூழ்கிக் கிடக்கும் உள் வீதிகளுக்கு மின் விளக்குகளைப் பொருத்தித் தருமாறு பிரதேச வாசிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் ஊடவியலாளருமான சிவம் பாக்கியநாதனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதன் நிமித்தம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட சற்று நேரத்திலேயே திங்கட்கிழமை 21.05.2018 உரிய பகுதிக்கு நேரடியாகச் சென்று பள்ளிவாசல் நிருவாகத்தினருடனும் கலந்துரையாடி மின் விளக்குகளைப் பொருத்தி ஒளிரச் செய்யும் நடவடிக்கையில் சிவம் பாக்கியநாதன் ஈடுபட்டார்.
இதனைப் பாராட்டியுள்ள அப்பகுதி முஸ்லிம்கள் இது தேவையறிந்து சேவை செய்யும் மனப்பாங்கு கொண்டவர்களின் இன ஒற்றுமைக்கான எடுத்துக் காட்டு என்று கூறினர்.
0 Comments:
Post a Comment