கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், காத்தான்குடி நகர சபையின் தற்போதைய உறுப்பினருமான ஷிப்லி பாறுக்கின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக மேற்படி பள்ளிவாசல் நிருவாகம் தெரிவித்தது.ஒலிபெருக்கி சாதனங்களைக் கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இப்பள்ளிவாசலுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைப்பாடாக இருந்த ஒலி பெருக்கி சாதனங்களை பெற்றுத்தந்தமைக்காக ஷிப்லி பாறுக் அவர்களுக்கு பள்ளிவாசல் நிருவாக சபையினர் மற்றும் ஜமாஅத்தார் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ஷிப்லி பாறுக்கின் கல்குடாத் தொகுதி இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, பள்ளிவாசல் நிருவாக சபையினர் மற்றும் ஜமாஅத்தார் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment